Back to top

#இலங்கை

#இலங்கை

2015 ஜனவரியில் மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கருத்து சுதந்திரம், சிவில் சமூகம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கான மேம்பட்ட நிலைமைகளுடன் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலைமையும் கணிசமாக மேம்பட்டிருக்கிறது. சிறிசேன நிர்வாகம் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் இருந்த நாட்டின் சர்வாதிகார சறுக்கலில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் ஊழல், வலிந்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு எதிராக மனித உரிமை பாதுகாவலர்கள் போராடுவது பெரும் ஆபத்தில் உள்ளது.

2009 ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்த போதிலும், கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன, மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் நில உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலைமை கடுமையாகவே உள்ளது. மோதலில் இரு தரப்பினரும் செய்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறவைக்க விரும்பும் மனித உரிமை பாதுகாவலர்கள் மரண அச்சுறுத்தல்கள், ஸ்மியர் பிரச்சாரங்கள், நீதித்துறை துன்புறுத்தல், சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். தமிழ் பிரதேசங்களில் ஒன்றுகூடல்கள் செய்வதற்கும் இராணுவம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் மற்றும் ராஜபக்ஷ ஆண்டுகளில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்கு பாதுகாப்புப் படையினரை பொறுப்பேற்க தற்போதைய அரசாங்கம் உண்மையான ஆர்வத்தை காட்டவில்லை என்பதால் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது ஒரு முக்கிய சிரத்தையாகும். பத்திரிகையாளர்கள் இன்னும் சில தலைப்புகளை உள்ளடக்கும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதால் பத்திரிகை சுதந்திரம் பலவீனமானதாக காணப்படுகிறது. பத்திரிகைக் குழுவின் மறுமலர்ச்சி - சுயாதீன குரல்களை குறிவைக்க ராஜபக்ஷவின் கீழ் பரவலாக வேலை செய்தது- ஜூலை 2015 இல் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் எச்சரித்தது. இலங்கையின் சட்ட கட்டமைப்பில் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட / இன்னும் பயன்படுத்தகூடிய சட்டங்களை உள்ளடக்கின்றது. மனித உரிமை பாதுகாவலர்களைக் குறிவைக்க முன்னர் பயன்படுத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (சி.டி.ஏ) மூன்றாவது வரைவுக்கு 2017 வைகாசி இல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது,

இன்னும் பாராளுமன்ற வாக்குகெடுப்பு நடக்க இருக்கின்றது, ஆனால் உரைமூலத்தில் இன்னும் சுதந்திரமான வெளிப்பாட்டையும் செயல்பாட்டையும் மீறும் மற்றும் நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் மக்களை நீண்ட காலமாக தடுத்து வைக்க காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய உட்பிரிவுகள் உள்ளடக்கின்றன.

மார்ச் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் (CCP) சட்டத்தின் புதிய திருத்தங்கள், சந்தேக நபர்களின், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்.

இலங்கைCases