ஜுவைரியா மொஹிதீன்
ஜுவைரியா மொஹிதீன் இலங்கையின் வடமேற்கில் உள்ள புத்தளத்தை மையமாகக் கொண்ட ஒரு இலங்கை முஸ்லீம் பெண் மனித உரிமை பாதுகாவலர் ஆவார். 1990 ஐப்பசியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக உள்நாட்டுக்குள் இடம்பெயர்த்தப்பட்ட வடக்கு முஸ்லீம் சமூகத்தில் இவரும் ஒருவராவார். மற்றும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் / நிர்வாக இயக்குனராகவும் உள்ளார் . 25 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பரிந்துரைப்பு செயற்பாடுகளில் ஜுவைரியா ஈடுபட்டுள்ளார். துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு MWDT தினசரி நடைமுறை ஆதரவு, ஆறுதல், ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை வழங்குகிறது. முஸ்லீம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் முஸ்லீம் தனிப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தத்திற்கான முனைவுகளில் ஜுவேரியாவும் முன் வரிசையில் உள்ளார். இவர் சீர்திருத்தத்திற்கான அடிமட்ட அடிப்படையிலான ஆதரவை திரட்டுவதுடன், உள்ளூர் பெண்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுடன் தொடர்பாடல் இடையீடல்களை செய்யவும் வழிகாட்டுகிறார். அவரது பணி காரணமாக அவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளார், தனது சொந்த சமூகத்தினரால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டார். இவர் சமூகங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான சமாதனத்துக்காக பணியாற்றுவதுடன் தனது சமூகத்தில் இளைய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறார்.