Back to top

2020 Front Line Defenders Award for Human Rights Defenders at Risk

 

 

2020 பிராந்திய விருது வென்றவர்கள்:

 

மெக்ஃபொலா மின்ர் பிரஹிம், மவுரித்தேனியா

Mekfoulaமெக்ஃபொலா மின்ர் பிரஹிம் ஒரு பெண் மனித உரிமை பாதுகாவலர் ஆவார், இவர் மத தீவிரவாதம் மற்றும் பாரபட்சமான நடைமுறைகளுக்கு எதிராக போராடுகிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் ஹராடின் மற்றும் துணை சஹாரா ஆபிரிக்க சமூகங்களின் உறுப்பினர்கள் மீதான பாகுபாடுகளிற்கு எதிராக போராடுகிறார். இவர் Pour une Mauritanie Verte et Démocratique (ஒரு பசுமை மற்றும் ஜனநாயக மவுரித்தேனியாவுக்கு) இன் தலைவர். இது கிராமப்புறங்களில் பெண்களை வலுவூட்டும் திட்டங்களை முன்னெடுக்க 2009 இல் நிறுவப்பட்ட ஒரு மனித உரிமை அமைப்பாகும். நல்லாட்சியை ஊக்குவிக்கும் மற்றும் தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டணி அமைப்பு pour la Refondation de l'Etat Mauritanien (AREM), அவரும் ஒரு உறுப்பினர். இவருக்கு எதிராக தொடர் துன்புறுத்தலின் ஒரு பகுதியாக, இவரது வீட்டில் ஒரு Pour une Mauritanie Verte et Démocratique மற்றும் AREM கூட்டத்தை நடத்தியதற்காக இந்த ஆண்டு மாசி மாசத்தில் மற்றைய மனித உரிமைகள் பாதுகாவலர்களுடன் மெக்ஃபொலா இரண்டு முறை கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.

 

காகாவின் (Cauca) பழங்குடி காவலர், கொலம்பியாவின்

காகாவின் பழங்குடி காவலர் - கிவே தெக்னாஸ் (வாழ்க்கை மற்றும் பிராந்தியத்தின் பாதுகாவலர்கள்), ஓர்கனைசேஷன் அசோசியசியன் டி கேபில்டோஸ் இண்டெஜெனாஸ் டெல் நோர்டே டெல் காகா (ACIN), CRIC கிளையின், அங்கத்துவ அமைப்பினது எதிர்ப்பு முறையானது, தங்கள் பிரதேசங்களை அமைதியான, நிராயுதபாணியான வழியில் பாதுகாக்கின்ற பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளாலான ஒரு சமுதாய வாழ்க்கை மற்றும் பூர்வீகம் சார் எதிர்ப்பாகும். இது கொலம்பியாவின் வன்முறை கொண்ட தென்மேற்கு காகா பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டதுடன், 2001 இல், இவ் அமைப்பு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டாக செயல்படத் தொடங்கியது. பழங்குடி காவலர்களில் பெரும்பாலானோர், மிகப்பெரிய, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, கொலம்பியா முழுவதும் பல ஆண்டுகளாக தங்கள் சொந்த பிரதேசங்களை பாதுகாக்க பிற சமூகங்களுக்கு பயிற்சி அளித்த நாசா பழங்குடி காவலர்களைச் சேர்ந்தவர்கள்.

ஆயுதமேந்தியவர்களின் தலையீடு , போதைப்பொருள் கடத்தல் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு சுரண்டல் ஆகியவற்றின் விளைவாக அவர்களின் சமூகங்கள் பல வகையான வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அதன் பல செயல்பாடுகளில், இந்த குழு அதன் சமூகங்களுடன் இணைந்ததான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள், சமாதானம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை வழங்குதல், அவர்களின் பிராந்தியங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தல், ஆயுத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மனிதாபிமான பாதுகாப்பு அளித்தல், மனிதாபிமான நடவடிக்கைகளின் கட்டமைப்பின் கீழ் போரின் பின்னணியில் காயமடைந்தவர்களை மீட்பது, கண்ணிவெடி அகற்றல் / அடையாளம் காணல் (ERM) குறித்த பயிற்சியை மேற்கொள்வது மற்றும் அவர்களின் நிலங்களிலிருந்து பெருமளவில் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

இதன் வகிபங்கு காரணமாக, பழங்குடி காவலர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களின் அமைதியான எதிர்ப்பை உடைக்க முற்படும் வெவ்வேறு தரப்புக்களிலிருந்து பல தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

ஜுவைரியா மொஹிதீன், முஸ்லீம் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை (எம்.டபிள்யூ.டி.டி), இலங்கை.

ஜுவைரியா மொஹிதீன் இலங்கையின் வடமேற்கில் உள்ள புத்தளத்தை மையமாகக் கொண்ட ஒரு இலங்கை முஸ்லீம் பெண் மனித உரிமை பாதுகாவலர் ஆவார். 1990 ஐப்பசியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக உள்நாட்டுக்குள் இடம்பெயர்த்தப்பட்ட வடக்கு முஸ்லீம் சமூகத்தில் இவரும் ஒருவராவார். மற்றும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் / நிர்வாக இயக்குனராகவும் உள்ளார் . 25 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பரிந்துரைப்பு செயற்பாடுகளில் ஜுவைரியா ஈடுபட்டுள்ளார். துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு MWDT தினசரி நடைமுறை ஆதரவு, ஆறுதல், ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை வழங்குகிறது. முஸ்லீம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் முஸ்லீம் தனிப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தத்திற்கான முனைவுகளில் ஜுவேரியாவும் முன் வரிசையில் உள்ளார். இவர் சீர்திருத்தத்திற்கான அடிமட்ட அடிப்படையிலான ஆதரவை திரட்டுவதுடன், உள்ளூர் பெண்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுடன் தொடர்பாடல் இடையீடல்களை செய்யவும் வழிகாட்டுகிறார். அவரது பணி காரணமாக அவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளார், தனது சொந்த சமூகத்தினரால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டார். இவர் சமூகங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான சமாதனத்துக்காக பணியாற்றுவதுடன் தனது சமூகத்தில் இளைய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறார்.

 

லாரா அஹரோனியன், மகளிர் வள மையம் - ஆர்மீனியா

லாரா அஹரோனியன், ஆர்மீனியாவில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்காக பணியாற்றும் ஒரு பெண் மனித உரிமை பாதுகாவலர் ஆவார். இவர் யெரெவனை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரச சார்பற்ற பெண்ணிய அமைப்பான ஆர்மீனியாவின் மகளிர் வள மையத்தின் இணை நிறுவனர் ஆவார். இவ் அமைப்பு, இது எதிர்மறையான பாலின பொதுப்புத்திகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், ஆர்மீனியாவில் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு உளவியல் மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதன் மூலமும் பெண்கள் மற்றும் சிறுமிகளை செயற்பாட்டின் குடிமக்களாக வலுவூட்டுவதற்கு உழைக்கின்றது. பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் டிரான்ஸ், லெஸ்பியன் மற்றும் இருபாலின கலப்பு பெண்களைச் சேர்ப்பது ஆகியவற்றிற்காக பரிந்துரைப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதில் பரந்த அனுபவம் லாரா அஹரோனியனுக்கு உண்டு. அவர் மனித உரிமைகள் மாளிகையின் (ஆர்மீனியா) குழு உறுப்பினராகவும் உள்ளார். மார்ச் 2018 இல் ஆர்மீனியாவின் தேசிய சட்டமன்றத்தில் எல்ஜிபிடி பெண்கள் உட்பட ஒதுக்கப்பட்ட்ட குழுக்களின் பாதுகாப்பிற்காக உரை நிகழ்த்திய பின்னர், லாரா, தீவிர வலதுசாரி குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 2018 இல் வெல்வெட் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மனித உரிமை பாதுகாவலர்களை பகிரங்கமாக தாக்குவதில்லை, ஆனால் லாராவும் மற்றவர்களும் வலதுசாரி மற்றும் தேசியவாத குழுக்களால் அதிகளவில் குறிவைக்கப்படுகிறார்கள். மேலும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தோல்வியுறுகின்றது.

 

பாத்திமா அல்-பஹத்லி, அல்-ஃபிர்தாவ்ஸ் சமூகம் , ஈராக்

பாத்திமா அல்-பஹத்லி தெற்கு ஈராக்கின் பாஸ்ரா நகரத்தைச் சேர்ந்த ஈராக்கிய பெண் மனித உரிமை பாதுகாவலர் ஆவார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதிலும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்கை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்திய அல்-ஃபிர்தாவ்ஸ் சொசைட்டி என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். கிராமப்புறங்கள் உட்பட பெண்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அல்-ஃபிர்தாவ்ஸ் கல்வியறிவு, கல்வி மற்றும் திறன் செயல் அமர்வு மற்றும் பணிகளை வழங்குகிறது. பாத்திமாவும் அவரது அமைப்பும் சமுதாயத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்க மத மதகுருமார்கள் மற்றும் பழங்குடித் தலைவர்களை அழைத்து, சிறுவர் திருமணம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரம்பகால பள்ளி இடை விலகலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூக உறுப்பினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். சமூகத்தின் இராணுவமயமாக்கலை எதிர்த்து பாத்திமா இளைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஆயுத குழுக்களில் சேர்ப்பதற்கு எதிராக அவர் போராடுகிறதுடன், மேலும் அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கு பணியாற்றுகிறார். பாத்திமா பல ஆண்டுகளாக இந்த பணியாற்றுவதன் நிமித்தம் மரண அச்சுறுத்தல்களுக்கு ஆளானது மட்டுமிண்றி அவரது பழங்குடியினரிடமிருந்தும் கடுமையான சமூக அழுத்தத்தை எதிர்கொள்ளுகின்றார்.

விருது பெற்ற ஐவருடனான பின்தொடர் நேர்காணல்கள் மற்றும் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகள் பல்வேறு மொழிகளில் வசதி செய்யப்படலாம்.